Latestமலேசியா

தவறான வேலை நீக்கம்; IT ஊழியருக்கு 342,900 ரிங்கிட் இழப்பீடு வழங்க Sunshine Bread-டுக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-23 – தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரைத் தவறாக வேலையிலிருந்து நீக்கியதற்காக, 342,900 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்குமாறு Sunshine Bread நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் நீண்ட கால பாதிப்புக்குள்ளான தான் செங் கோக்கால் (Tan Seng Kok), நிர்வாகம் கூறிய படி வேலைக்குத் திரும்ப முடியாமல் போனது, வேலை ஒப்பந்த விதிகளை மீறியச் செயல் அல்ல.

எனவே, நன்கு திட்டமிட்டே வேலையிலிருந்து நீக்கி, அவரின் வாழ்க்கையை அந்நிறுவனம் கடுமையாக்கியதாக, தொழில் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

Tan Seng Kok, ஐந்தாம் கட்ட கோவிட் பாதிப்புக்குள்ளாகி, 2021 ஜூன் 30-ஆம் தேதி சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தங்கியிருந்தது, மருத்துவ விடுப்பு, வருடாந்திர விடுப்பு, சம்பளமில்லாத விடுப்பு என மொத்தமாக 183 நாட்கள் விடுப்பிலிருந்தவர், 2022 ஏப்ரல் 26-ஆம் தேதி வேலைக்குத் திரும்பியிருக்க வேண்டும்.

அது முடியாமல் போகவே, ஜூன் 1-ம் தேதி வேலைக்குத் திரும்புவதாக் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அதற்குள் அவர் பக்க நியாயத்தைக் கேட்காமல் நிறுவனம் வேலை நீக்கம் செய்து விட்டது.

அவ்விஷயத்தில், ஊழியரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவரிடம் கருணையோடும், இரக்கத்தோடும் நடந்திருக்க வேண்டும்.

ஆனால் Sunshine Bread அதைச் செய்ய தவறி விட்டது; எனவே Tan Seng Kok-கிற்கு அது இழப்பீடு வழங்கியாக வேண்டுமென, தொழில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!