
சென்னை, பிப் 6 – தவளை இருந்த ஐஸ்கிரிம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வாந்தி எடுத்ததைத் தொடரந்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூன்று குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மதுரை கோவலன் நகரைச் சேர்ந்த அன்பு செல்வம் என்பவரின் மனைவி ஜானகிஸ்ரீ தைப்பூச விழாவுக்கு தமது 8வயது , 7 வயது மகள்களுடன் உறவினரின் 5 வயது குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
கோவிலுக்கு அருகேயுள்ள குளிர்பான கடையில் அந்த பிள்ளைகளுக்கு ஜிகர்தாண்டா வாங்கி கொடுத்துள்ளார். அதனை அருந்திய அந்த மூன்று சிறார்களும் ம் திடீரென வாந்தி எடுத்தனர். உடனடியாக அந்த பானத்தை பரிசோதித்தபோது அதில் போடப்பட்டிருந்த ஐஸ்கிரிமில் ஒரு தவளை மடிந்து கிடந்திருப்பதை கண்டு ஜானகிஸ்ரீ அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து குளிர்பான கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.