Latestமலேசியா

தவ்பிக்கிற்கு எதிரான விசாரணைக்கு ஆவணங்களும் சாட்சிகளும் அடையாளம் காணப்படும்

கோலாலம்பூர், மார்ச் 4 – MDB நிதியை பெற்றதாக கூறப்படும் Dr. Tawfiq Ayman னுக்கு எதிரான விசாரணைக்கு உதவக்கூடிய வெளிநாட்டிலுள்ள சாட்சிகள் மற்றும் ஆவணங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டு வதுருகிறது.

பேங்க் நெகாராவின் முன்னாள் கவனர் டாக்டர் ஸெட்டியின் கணவருமான Tawfiq Ayman மீதான குற்றச்சாட்டு முழுமையடைந்திருப்பதோடு மேல் நடவடிக்கைக்காக மற்றும் பரிசோதனைக்காக அது தொடர்பான அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்.

புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோ Mohd Kamarudin Md Din இதனை தெரிவித்தார். ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சாட்சிகளை கண்டறியும்படி சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலீசிற்கு பணித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!