Latestமலேசியா

தாசிக் ஷா ஆலம் செக்ஷ்ன் 7 நீர்ப்பகுதியில் முதலை; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஷா ஆலம், செப்டம்பர் 3 – காணொளி ஒன்றின் வழி, தாசிக் ஷா ஆலம் (Tasik Shah Alam) செக்ஷ்ன் 7-லில் முதலை இருப்பதைக் கண்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில், தாசிக் ஷா ஆலம் செக்ஷ்ன் 7-லில், உள்ள நீர்ப்பகுதியில் முதலை ஒன்று இருப்பது காணமுடிகிறது.

அதனைத் தொடர்ந்து, பொழுதுபோக்கைச் செலவழிக்க அங்குச் செல்லும் மக்கள் கவனமாக இருக்குமாறு ஷா ஆலம் மாநகர மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக 2019ஆம் ஆண்டும், தாசிக் ஷா ஆலம் செக்ஷ்ன் 14-யில் 0.6 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!