தாசேக் குளுகோர், நவம்பர்-17 – பினாங்கு, தாசேக் குளுகோரில் மதுபோதையில் நடந்த சண்டையில், வெளிநாட்டு ஆடவர் உள்ளூர் ஆடவரின் இடது கண் விழியைத் தோண்டியெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலான் ஆராவ் கூடாவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மதுபோதையிலிருந்த 52 வயது ஆடவர், 28 வயது சந்தேக நபரைத் தொந்தரவுச் செய்துள்ளார்.
இதனால் மூண்ட சண்டையில், அந்த வெளிநாட்டு ஆடவர் தன் கைகளாலேயே போதையிலிருந்த நபரின் இடது கண் விழியைத் தோண்டியெடுத்து விட்டார்.
வலது கண்ணிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
கிப்பாளா பாத்தாஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சந்தேக நபரை போலீசார் சம்பவ இடத்தில் கைதுச் செய்தனர்.
தகவல் கிடைத்து, காயமடைந்த நபரை அழைத்துச் செல்வதற்காக வந்த மருத்துவப் பணியாளர்கள், அந்நபர் விழுந்துகிடந்த இடத்தருக்கே அவரின் கண்விழியைக் கண்டெடுத்தனர்.