கோலாலம்பூர், மார்ச் 2 – அதிகார வரம்பை மீறியதாக கூறப்பட்ட பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் மீதான MACC யின் விசாரணையில் மேல் நடவடிக்கை இல்லையென (NFA) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீதான லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணையை MACC தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என சட்ட அமைச்சர் Wan Junaidi Tuanku Jafar நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Kulai தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். Prasarana வின் முன்னாள் தலைவருமான Tajuddin விவகாரத்தில் அவர் தவறு புரிந்ததற்கான அம்சங்கள் எதனையும் MACC கண்டறியவில்லை. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2021ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி Tajuddin னை கைது செய்தது. எனினும் பின்னர் ஜாமினில் அவரை விடுவித்தது.