
கோலாலம்பூர், ஜூன் 29 – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு ஆதரவு வழங்கும் சத்திய பிரமான வாக்குமூல பிரகடனத்தில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாக அக்கட்சியின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ Tajuddin Abdul Rahman அம்பலப்படுத்தியது கடுமையானது என்பதால் அது குறித்து அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் தேசிய முன்னணியின் ஆலோசகரான போஸ்கூ எனப்படும் நஜிப் ரசாக்கும் விளக்கம் அளிக்க வேண்டுமென ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜகோபாலு கேட்டுக்கொண்டார்.
அன்வாரை பிரதமராக்குவதற்கு ஆதரவு வழங்கும் சத்திய பிரமான பிரகடனத்தை திரட்டும் முயற்சி உண்மையாக இருக்குமானால் அதற்கான பின்னணியும் , தேவைக்கான காரணம் என்ன? இந்த நடவடிக்கைக்குப் பின்னால் திரைமறையில் அரசியல் நலனும் தனிப்பட்ட நோக்கமும் இருக்கிறதா என்றும் தினாளன் ராஜகோபாலு வினவினார். ஒரு வேளை Tajuddin கூறியது உண்மை என நிருபிக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக தேசிய முன்னணி உச்சமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்க வெண்டும் என தினாளன் ராஜகோபாலு வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார். Tajuddin அறிக்கை பொய்யாக இருக்குமானல் இந்த வினாடிவரை அந்த இரு தலைவர்களிடமிருந்து ஏன் மறுப்பு அறிக்கை வரவில்லை மற்றும் Tajuddin-னுக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தினாளன் வினவினார்.