
கெடா, ஜன 25 – அலோர் ஸ்டாரில் பணிப்புரியும் 41 வயது தாதி ஒருவரும், 52 வயது டி. முருகம்மாள் எனும் இந்திய குடும்ப மாது ஒருவரும் தங்களுக்கு எதிரான குழந்தை கடத்தல் குற்றச்சாட்டை மறுத்து ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை கோரினர்.
மூன்றாண்டுகளுக்கு முன், பேராக், மஞ்சோங்கிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் வாகனம் நிறுத்தும் இடத்தில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்தததாக தெரிவிக்கப்பட்டது.
பிறந்து ஒன்பது நாட்களே ஆன, பெண் குழந்தை ஒன்றை கடந்த முயன்றதாக, 2007-ஆம் ஆண்டு ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது ஐந்தாண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
அவ்விருவரையும், தனிநபர் உத்தரவாதம் மற்றும் தலா பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.