தானா மேரா , மே 3 – தானா மேரா, Jerangau , kampung Tal Tujuhவில் மக்களுக்கு தொல்லையாக இருந்துவந்த யானை ஒன்றை தேசிய வனவிலங்கு பூங்காத்துறை அதிகாரிகள் பிடித்தனர். தங்களது கிராமத்தில் அந்த யானை தொல்லையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து அந்த யானை பிடிக்கப்பட்டதாக கிளந்தான் வனவிலங்கு பூங்காத்துறையின் இயக்குனர் Mohamad Hafid Rohani தெரிவித்தார்.
வனவிலங்கு பூங்காத்துறையைச் சேர்ந்த ஆறு ஊழியர்கள் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து அந்த ஆண் யானையை பிடிப்பதில் நேற்று வெற்றி பெற்றனர். இந்த யானை பிடிக்கப்பட்டதன் மூலம் கிராம மக்கள் இப்போது நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். அந்த யானையினால் கிராம மக்களின் தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் பிரச்சனையை எதிர்நோக்கியதாக Mohamad Hafid Rohani கூறினார்.