தான் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபரை கொலை செய்த 24 வயது பெண்; இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்
நாக்பூர், ஏப்ரல் 8 – தான் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபரை கொலை செய்த இளம் பெண் ஒருவரின் செயல் இந்தியா நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதான அப்பெண், கடையில் நின்று புகைபிடித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு நபர், அந்த இளம் பெண் புகைப்பதை முறைத்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்து வாக்குவாத்தில் ஈடுபட, அந்த இளம் பெண் தன்னை திட்டுவதையும், புகைபிடித்து தன் பக்கம் புகைவிடுவதையும் செல்போனில் படம்பிடித்துவிட்டு அங்கிருந்து அந்த ஆடவர் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, தனது நண்பர்களுடன் சென்ற அந்த இளம் பெண் அந்த ஆடவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில் அந்த பெண் கத்தியால் மீண்டும் மீண்டும் அந்த நபரைக் குத்திக் கொல்வது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலிசார் தப்பியோடிய அந்த இளம்பெண்ணையும் நண்பர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.