தாப்பா, ஆகஸ்ட்-10 – Drone வாயிலாக தாப்பா சிறைச்சாலைக்குள் போதைப்பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி, கூரையில் drone ஒன்று இருப்பதைக கண்டு சந்தேகத்தில் தகவல் கொடுத்தார்.
பரிசோதித்த போது,
drone-னில் சலவை பையொன்று அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.
அதனுள்ளே 3 சிறியப் பொட்டலங்களில் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டு சிறைச்சாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்தமாக 12.9 கிராம் எடையுடைய போதைப்பொருள் சிக்கியதாக போலீஸ் கூறியது.
Drone-னைப் பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் போதைப்பொருளைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதுவே முதன் முறையென பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) சொன்னார்.