Latestமலேசியா

தாமதமாகச் சென்று விமானத்தைத் தவற விட்டு விட்டு அதிகாரிகளைக் குறைச் சொல்வதா? பிரதமரின் மூத்த அதிகாரியை விளாசும் நெட்டிசன்கள்

கோலாலம்பூர், மே-13, தாமதமாகச் சென்றதால் Air Batik விமானத்தைத் தவற விட்டது குறித்து பிரதமரின் மூத்த உதவியாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் புலம்பித் தள்ளியது, நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளரான Shamsul Iskandar Mohd Akin சனிக்கிழமை மாலை 6.50 மணிக்கு பினாங்கில் இருந்து கோலாலம்பூருக்கு மேற்கொள்ளவிருந்த விமானப் பயணம், இரவு 8 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இரவு 7.45 மணிக்கு தனது பெயர் ஒலிப்பெருக்கியில் அழைக்கப்பட்டு 5 நிமிடங்கள் கழித்து, தான் புறப்பாடு வாசலுக்குச் சென்றதாகவும், ஆனால் அது மூடப்பட்டு விட்டதாகவும் தனது X தளத்தில் Shamsul குறிப்பிட்டார்.

பயனர் என்ற முறையில் தாம் முறையாக நடத்தப்படவில்லை; எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலாக்கா, Hang Tuah Jaya தொகுதியின் முன்னாள் MP-யுமான Shamsul-லின் அப்பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

“விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும் போது Boarding Gate மூடப்படும் என்பது SOP-யாகும். ஆக முன்கூட்டியே அவர் அங்குச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விமான நிலைய அதிகாரிகளைக் குறைச் சொல்வது நியாயமா?” என நெட்டிசன் ஒருவர் கேட்டார்.

பிரதமரின் காதுக்கும் அவ்விஷயம் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் அவரின் X தள பக்கத்தையும் அந்த நெட்டிசன் tag செய்து விட்டார்.

விமானங்கள் VIP-களுக்கு காத்திருக்க வேண்டும் என்பது சட்டமா என்ன? இது என்ன சிறப்புரிமையா? என இன்னொரு நெட்டிசன் காட்டமாக கேட்டார்.

அதோடு, அந்தோனி லோக்கின் பெயரை Shamsul குறிப்பிட வேண்டிய அவசியம் எதற்கு வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“Shamsul அவர்களே, உங்களின் நடவடிக்கையால் பிரதமருக்குத் தான் கெட்டப் பெயர். தயவு செய்து, சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.” என
@Nsyawana என்ற X தள பயனர் விளாசினார்.

விமானத்தைத் தவற விட்டு விடுவோமோ என்ற பயத்தில் மற்ற பயணிகள் எல்லாம் முன்கூட்டியே வந்து மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க, இவர் மட்டும் கடைசி நேரத்தில் வந்து, விமானம் போய் விட்டதே என கூப்பாடு போடுவாரா என Nsyawana பொறிந்துத் தள்ளி விட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!