Latestமலேசியா

தாமதமாகவே உணவு கிடைத்தது வாடிக்கையாளர்கள் ஆதங்கம்

கோலாலம்பூர், ஆக 5 – இந்நிலையில், இன்று நடத்தபட்ட உணவு விநியோகிப்பாளர்கள் மறியலினால், ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் மிகவும் தாமதமாக கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு நீண்ட நேரம் ஆகியும் அந்த உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உணவு விநியோகிப்பாளர்கள் வராததால் அவ்வுணகள் தொடர்ந்து பல மணி நேரம் கடைகளில் அப்படியே இருந்ததாக கூறப்பட்டது.

சில இடங்களில் ஆர்டர் செய்த உணவுளை பெறுவதற்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக காத்திருக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக தங்களது அனுபவங்களை சிலர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!