Latestமலேசியா

தாமான் டோவன்பி கல்லுடைப்பினால் பாதிக்கப்படும் 90 வீடுகளை வெளியேற்ற நடவடிக்கை !

சுங்கை சிப்புட் ஆக. 16- சுங்கை சிப்புட் தாமான டோவன்பி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் கல்லுடைப்பு நடவடிக்கையால் 90 வீடுகள் பாதிக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளன. அந்த வீடுகளை அகற்ற அங்கு கல்லுடைப்பை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் தீர்வுகாண நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்குவது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. மணிமாறன் தெரிவித்தார். பல ஆண்டுகள் கல்லுடைப்பால் பாதிக்கப்படும் வீடுகளை அங்கிருந்து வீட்டின் உரிமையாளர்கள் அனுமதியுடன் அகற்ற சட்டப் பூர்வமாக மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாதிக்கப்பட்டும் மக்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க கண்காணிப்பு நடவடிக்கையை சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் கே. மணிமாறன் தெரிவித்தார். இந்த வீடுகளுக்கு இழப்பீட்டை வழங்க நிர்ணயம் செய்ய மாநில சொத்து மதிப்பீட்டு இலாகா மற்றும் மாவட்ட இலாகா அதிகாரிகள் தாமான் டோவன்பிக்கு வருகை புரிந்து ஆய்வை மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக ம.இ.கா கிளைத் தலைவர்களான பத்மநாதன், பத்துமலை மற்றும் இளைஞர் பகுதி தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!