ஷா ஆலாம், மார்ச் 3 – அண்மையில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஷா ஆலாம் , Taman Sri muda- வில் நேற்றிரவு தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் இருந்த வெள்ளத் தடுப்பு உடைந்தது.
இரவு மணி 8 -வாக்கில் நிகழ்ந்த அந்த சம்பவத்தால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததாக நம்பப்படுகிறது.
எனினும் அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் இயக்குநர் Norazam Khamis தெரிவித்தார்.