
குளுவாங், மார்ச் 26 – தாமான் ஸ்ரீ குளுவாங், ஜாலான் 18 இல் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடவர் ஒருவர் காயம் அடைந்ததோடு இதர ஐவர் காயமின்றி உயிர் தப்பினர்.
இரண்டு புரோடுவா மைவி (Peroudua Myvi) கார்களும், புரோட்டோன் சகா (Proton Saga) காரும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டன.
மைவி கார் ஒன்றில் இருந்த குழந்தை உட்பட நான்கு பயணிகள் காயம் அடையவில்லையென தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நடவடிக்கையின் கமாண்டர் சம்சுல் அம்ரி சுஹாப் ( Shamsul Amri Shahab ) தெரிவித்தார்.
இரண்டாவது மைவி காரின் பெண் ஓட்டுநரும் காயம் அடையவில்லை.
இந்த விபத்தில் காயம் அடைந்த புரோட்டோன் சகா கார் ஓட்டுனர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்