Latestமலேசியா

தாமான் OUG-யில் சொந்தத் தாயைக் கொன்று மூன்றாண்டுகளாக வீட்டின் குளிர்பதனப் பெட்டிக்குள் சடலத்தை வைத்த மகன் கைது

கோலாலம்பூர், நவம்பர்-12 – கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, தாமான் OUG-யில் சொந்த மகனால் கொல்லப்பட்டு, மூன்றாண்டுகளாக வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை அடுத்து 50 வயது அவ்வாடவர் இன்று உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டார்.

2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 80 வயது மதிக்கத்தக்க தாயை அந்நபர் அடித்தே கொன்றதாக நம்பப்படுகிறது.

தாயின் சடலத்தை துண்டு மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, குளிர்பதனப் பெட்டியில் வைத்து விட்டார்.

தாயைக் கொன்றதையும், சடலத்தை வீட்டிலேயே வைத்திருப்பதையும் யாருக்கும் தெரியாமல் இப்படியே மூன்றாண்டுகளை கடத்தி விட்ட அவ்வாடவர், இன்று காலை 9 மணிக்கு போலீசுக்கு அழைத்து புகாரளித்தார்.

தனது சேமிப்பும் குறைந்து, நாட்பட்ட நோயால் அவதிற்றும் வருவதால், இனியும் உண்மையை மறைக்க முடியாது என்றெண்ணி, அவராகவே போலீசை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார்.

தாயின் சடலம் வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப் பெட்டிக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அவ்வாடவரை, சம்பவ இடம் விரைந்த போலீஸ் கைதுச் செய்தது.

அதோடு குளிர்பதனப் பெட்டியிலிருந்து அவரின் தாயின் உடலை மீட்டு, சவப்பரிசோதனைக்கும் அனுப்பியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!