
கோலாலம்பூர், மே 2 – பல்கலைக்கழகத்தில் உணவு மையம் மூடப்பட்டதால் தாமும் இதர மாணவர்களும் 24 மணி நேரம் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் பட்டினியில் அவதிப்பட்டதாக மாணவர் ஒருவர் வேதனையுடன் கூறும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது நெட்டிசன்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களும் வெளியே சென்று உணவு வாங்குவதற்கு வாடகை காரில் செல்வதற்கான வசதியை பெற்றிருப்பதில்லை. கிரேப் அல்லது Food Pand உணவு விநியோகிப்பாரின் சேவையில் உணவு ஆர்டர் செய்வதற்கும் பணம் தேவை . எனவே பல்கலைக்கழகங்கள் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு உணவு மையங்களை திறக்க வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் விடுமுறை காலங்களில் மாணவர்கள் சுயமாக விவேகத்துடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை தெரிவித்தனர்.