கீவ், பிப் 28 – பாதுகாப்பு தேடி , பல ஆயிரக்கணக்கானோர் உக்ரேனிலிருந்து வெளியேறி வரும் நிலையில், தங்களது தாயகத்தைக் காக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து உக்ரேனிய மக்கள் சிலர் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.
எங்களது தாயகத்தை காப்பதற்காக நாங்கள் போரிடவில்லை என்றால் வேறு யார் போரிடப்போகிறார்கள் என , வெளிநாடுகளில் இருந்து திரும்பியிருக்கும் உக்ரேனிய மக்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, தங்களது ராணுவத்துக்கு ஆதரவாக உக்ரேனில் ஆண்-பெண் வித்தியாசமின்றி பொது மக்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கையில் ஆயுதத்தை ஏந்தியுள்ளனர்.
அவ்வகையில், உக்ரேனிய பெண் நாடாளுமன்ற உறுப்பினரான Kira Rudik, அந்நாட்டின் முன்னாள் அழகு ராணி Anastasiia Lenna ஆகியோர் ஆயுதமேந்தி காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.