Latest
தாயகம் திரும்புவதாகக் கூறியது ஒரு குற்றமா? இந்தோனேசியக் காதலியைக் கத்தியால் குத்திய ரொஹின்யா ஆடவன்
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/rohingnya.jpg)
ஜெம்போல், செப்டம்பர்-27 – நெகிரி செம்பிலான், ஜெம்போலில் காதலன் கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் 40 வயது இந்தோனீசியப் பெண் படுகாயம் அடைந்தார்.
Taman ACBE-யில் உள்ள வீட்டொன்றில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்தோனீசியாவுக்கே திரும்பவிருப்பதாகக் கூறியதால் கோபமடைந்த 38 வயது மியன்மார் நாட்டு காதலன், அப்பெண்ணை அடித்து கத்தியால் குத்தியுள்ளான்.
பின்னர் SM Sport 110R ரக மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய அந்த ரொஹின்யா ஆடவனை போலீஸ் தேடி வருகிறது.
முகம், தோள்பட்டை மற்றும் வயிற்றில் கத்திக் குத்துக்கு ஆளான அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.