குவா முசாங், பிப் 17 – 54 வயது பெண், வளர்ப்பு மகனால் பாராங்கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கிளந்தான் குவா மூசாங் –கிலுள்ள Kampung Dalam Senduk பகுதியில் நிகழ்ந்தது.
அந்த பெண்ணின் தலையை துண்டித்த 39 வயது மதிக்கத்தக்க ஆடவன் பின்னர் தானாகவே போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாக , குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் Sik Choon Foo தெரிவித்தார். அந்த ஆடவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதோடு போதைப் பித்தன் எனவும் தெரிய வந்ததாக அவர் கூறினார்.