அயேர் கெரோ, ஜூலை 6 – மலாக்கா, அயேர் கெரோ (Ayer Keroh)வில் தனது தாயைக் கத்தியால் குத்திக் கொன்றிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 3 மணியளவில் நிகழ்ந்த சம்பவத்தில் கழுத்தில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்ட பணி ஓய்வு பெற்ற ஆசிரியையான 63 வயது ரோஸிஸா மாட் டோம் (Rozizah Md Dom) தனது வீட்டிலேயே உயிரிழந்தார். ஐந்து பிள்ளைகளில் மூத்தப் பிள்ளையான 38 வயது ஆடவர் தான், அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பதாக நம்பப்படுகிறது.
தனது தாயைக் கொன்று விடும்படி காதில் யாரோ முனுமுனுத்த சத்தம் கேட்டதாகவும், அதனால் தான் அவரைக் கொன்றதாகவும் அவ்வாடவர் போலீசிடம் கூறியிருக்கின்றார். அவ்வாடவர் மீது ஏற்கனவே போதைப் பொருள் தொடர்புடைய போலீஸ் குற்றப்பதிவுகள் இருக்கின்றன. அதோடு அவர் மனநல சிகிச்சைப் பெற்று வந்திருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாக மலாக்கா போலீஸ் தலைவர் தெரிவித்தார்.