
இந்தோனேசியா, ஜாகார்தாவில், சொந்த தாயையும், ஏழு வயது சகோதரியையும் கற்பழித்த ஆடவன் ஒருவனின் அருவருக்கத்தக்க செயல் அம்பலமானதை அடுத்து அவன்
கைதுச் செய்யப்பட்டான். கடந்த திங்கட்கிழமை, சிறுநீர் கழிக்கும் போது வலிப்பதாக கூறிய அச்சிறுமி, பின்னர் தமது சகோதரன் தம்மை கற்பழித்தை அண்டை வீட்டுக்காரரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து, அண்டை வீட்டுக்காரர் வழங்கிய புகாரின் அடிப்படையில் அந்த 19 வயது ஆடவன் கைதுச் செய்யப்பட்டான். பணம் கேட்டு கொடுக்காததால் சினமடைந்த அந்த ஆடவன், தாயையும், சகோதரியையும் கற்பழித்ததோடு, தாயை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன், 2021-ஆம் ஆண்டும் அவன் அதே குற்றத்தை புரிந்த வேளை; கொலை செய்யப்போவதாக மருட்டலும் விடுத்துள்ளான்.