
கோலாலம்பூர், பிப் 6 – இவ்வாண்டு தைப்பூச விழா நாடெங்கிலும் விமரிசையாக அனுசரிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட முருகர் இன்று பத்துமலையிலிருந்து மீண்டும் தாய்க்கோயிலை நோக்கி புறப்பட்டுள்ளார்.
மதியம் 3 மணியளவில் சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் நடத்தப்பட்டு நாதஸ்வர மேள தாளத்துடன் பக்தர்கள் புடைசூழ வெள்ளி ரதத்தில் அவர் புறப்பட்டிருக்கின்றார்.
கடந்த இரண்டு தினங்களாக பத்துமலை தைப்பூசத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்களால் களைகட்டியிடருந்தது.