Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகளை அழிக்க நினைக்கும் மூன்று தரப்புகள் – டாக்டர் ராமசாமி சாடல்

கோலாலம்பூர், நவ 25 – தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக மூன்று மலாய் தேசியவாத தரப்புக்கள் தொடுத்திருக்கும் வழக்கு தவறான கருத்து ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது. பல ஆண்டுகளாக இந்நாட்டில் செயல்பட்டு வரும் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு எதிராக அந்த மூன்று தரப்புக்கள் வழக்கு தொடுத்திருப்பது மலேசியர்களின் குடும்ப உணர்வு கோட்பாட்டிற்கு எதிரானது. இனவாத அடிப்படையில் செயல்பட்டுவரும் அந்த மூன்று தரப்புகளும் தாய்மொழிப் பள்ளிகளை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடுத்துள்ளது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என டாக்டர் ராமசாமி தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இனவாதம் என்பது தாய்மொழிப் பள்ளிகளின் விளைபொருளல்ல, மாறாக பெரும்பான்மை தேசியவாதம் மற்றும் மத தீவிரவாதத்தை வளர்க்கும் அரசியல் அமைப்பின் இயல்பாகும். எனினும் இனவாத தரப்பிற்கு எதிராக தாய்மொழிக் கல்வி முறையைப் தற்காப்பதற்கு முக்கிய காரணங்கள் இருப்பதையும் DAP யின் முன்னணி தலைவருமான டாக்டர் பி.ராமசாமி சுட்டிக்காட்டினார். தாய்மொழிப் பள்ளிகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன, அது சுதந்திரத்திற்குப் பிறகு தேசியக் கல்வி முறையில் முறைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும் தாய்மொழிப் பள்ளிகளை அகற்ற முடியாது. தாய்மொழிப் பள்ளிகளும் தேசியப் பள்ளிகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்றும் டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!