Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகள் இனங்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கிறது

கோலாலம்பூர்,செப் 1 – தாய்மொழிப் பள்ளிகள் இனங்களிடையே ஒன்றுமையை ஊக்குவிப்பதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் Aaron Ago Dagang தெரிவித்திருக்கிறார். இனங்களுக்கிடையே பிளவுகளை தாய்மொழிப் பள்ளிகள் ஏற்படுத்துவதால் அவற்றை மூட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருப்பதை Aaron Ago Dagang மறுத்தார்.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு முக்கிய அம்சங்களாக விளங்குவதாக அவர் தெரிவித்தார். தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிகளில் பயிலும் மலாய்க்கார மாணவர்கள் தங்களது கல்வியை முடித்தபின் தமிழ், மென்டரின் மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக Aaron ago சுட்டிக்காட்டினார்.

கல்வியின் மூலமாவே இனப் பிளவுகளை குறைக்க முடியும் என்றும் அதற்கு தாய்மொழிப் பள்ளிகளை ரத்துச் செய்வதே சிறந்த வழியென நேற்று டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். மேலும் சின இனங்கள் தேசிய பள்ளிகளை சமயப் பள்ளிகளாக கருதுவதால் அவர்கள் அப்பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை பதிவு செய்ய மறுத்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தேசிய பள்ளிகளில் நிலைமை மேம்பட்டிருந்த போதிலும் சிறுபான்மை இன மக்கள் இன்னமும் தேசிய பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்த்துவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!