
கோலாலம்பூர், மார்ச் 29 – தாய் மொழியில் நன்றாக எழுதப் படிக்கும் ஆற்றல் குறைந்தவர்களாக, தமிழ் மாணவர்கள் இருப்பதாக, மொழி போட்டியாற்றல் தொடர்பில் , Stanford பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வு, இந்தியாவில் உள்ள 10,000 பள்ளிக்கூடங்களில் , 20 வேறு தாய்மொழிகளில் அடிப்படைக் கல்வியைக் கற்கும் மூன்றாம் வகுப்பைச் சேரந்த 86,000 மாணவர்களை உட்படுத்தியிருந்தது.
அதில், தமிழில் அடிப்படைக் கல்வியைக் கற்கும் மாணவர்களே எழுதுவதிலும் படிப்பதிலும் மிகக் குறைவான ஆற்றலைப் பெற்றிருந்தனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் மாணவர்களில், 9 விழுக்காட்டினர் மட்டுமே , உலகளாவிய கல்வி புலமையைத் தாண்டியிருந்தனர். 48 விழுக்காட்டினர் பாதி உலகளாவிய கல்வி புலமைக்கும் கீழ் இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.