ரந்தாவ் பாஞ்சாங், அக்டோபர்-7,
தாய்லாந்திலிருந்து கடத்திகொண்டு வரப்பட்ட RM2.1 மில்லியன் மதிப்பிலான 40,000 ஆர்கிட் செடிகள், கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று காலை Chabang Empat Salam சாலைத் தடுப்புச் சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த லாரியை, பொது நடவடிக்கைக் குழு (PGA) தடுத்து நிறுத்தியது.
அப்போது, முறையான பத்திரம் எதுவுமின்றி அந்த ஆர்கிட் செடிகள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான 52 வயது உள்ளூர் ஆடவர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டார்.
அவரும் பறிமுதல் செய்யப்பட்ட செடிகளும் மேல் நடவடிக்கைக்காக ரந்தாவ் பாஞ்சாங் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக PGA அதிகாரி சொன்னார்.
1976-ஆம் ஆண்டு தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.