தாய்லாந்து, செப்டம்பர் 26 – தாய்லாந்தில்,60 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று அதிக உடல் எடையால் நிற்க முடியாத அவல நிலையைச் சந்தித்துள்ளது.
இந்த எடை அதிகரிப்புக்குக் காரணமே, சுற்றுலா பயணிகளால் அதிகமாக வழங்கப்பட்ட உணவுகள், குறிப்பாக பழங்களே எனக் கூறப்படுகிறது.
அந்த யானையின் இருப்பிடமும் சிறியது எனும் நிலையில், அதன் எடை 3,000 கிலோ கிராம்களுக்கு மேல் கூடியுள்ளது.
இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி அன்று, யானை படுத்திருந்தாலும் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையைக் கண்டறிந்த உரிமையாளர், பிறரின் உதவியை நாடியுள்ளார்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாகத் தோல்வியடைந்த மீட்பு முயற்சிகளுக்குப் பிறகு, எக்ஸ்கவேட்டரைப் பயன்படுத்தித்தான் அந்த யானையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது, அந்த யானை அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.