Latestஉலகம்

தாய்லாந்தில், காதலியின் பிறந்தநாளில் மற்றொரு பெண்ணை வெறித்துப் பார்த்த காதலனுக்கு கத்தி குத்து

பேங்கோக், நவம்பர் 17 – காதலியின் பிறந்தநாள் அன்று, மற்றொரு பெண்ணை வெறித்துப் பார்த்த கம்போடிய ஆடவர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கானார்.

அவ்வாடவரின் செயலால் சினமடைந்த அவரது காதலி, சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சமையலறை கத்தியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை மணி 2.30 வாக்கில், தாய்லாந்து, பங்களாமுங் எனும் இடத்திலுள்ள, வீடொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டிற்கு அருகிலுள்ள, ஒத்தையடி பாதையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவ்வாடவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவ்வாடவருக்கும் அவரது காதலிக்கும் இடையில் மூண்ட வாய்ச்சண்டை முற்றியதால், தப்பி ஓட முயன்ற அவரை அப்பெண் நெஞ்சு மற்றும் கை மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் குத்தி காயப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அவர்கள் தங்கி இருந்த வீடு அலங்கோலமாக காணப்பட்ட வேளை ; பிறந்தநாள் கேக் தரையில் சிதறிக் கிடந்தது போலீசார் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!