தாய்லாந்து, செப் 17 – தனக்கு பிறந்த பெண் குழந்தையை தன்னிடம் மாற்றிக் கொடுத்ததோடு அது உங்களுடைய குழந்தைதான் என கெடுபிடியாக நின்ற மருத்துவமனை தரப்பின் மீது அதிருப்தி கொண்டுள்ளார் தந்தை ஒருவர்.
ஆகஸ்டு 11ல் அந்த ஆடவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்த அக்குழந்தை மீண்டு ஆகஸ்டு 18ஆம் திகதி பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தான் பகுழந்தையின் புருவம் மாறுபட்டிருப்பதையும் குழந்தையின் தலைமுடி குறைவாக இருந்ததையும் கண்டு இது என் குழந்தை அல்ல என வாதிட்டுள்ளார் அந்த தந்தை. மேலும் குழந்தையின் கையில் கட்டப்பட்டிருந்த அட்டையிலும் பெயர் வேறாக இருந்துள்ளது.
ஆனால் இதை ஒப்புக்கொள்ளாத மருத்துவமனை தரப்பு, குழந்தையின் முகம் ஒவ்வொரு நாளும் மாறும், அந்த கையில் கட்டப்பட்ட பெயர் அட்டை குளிப்பாட்டும் தருணத்தில் மாறியிருக்கலாம். எனவே இது உங்கள் குழந்தைதான் அழைத்துச் செல்லுங்கள் என கூறியிருக்கிறது.
முதலில் ஏதோ சமாதானம் அடைந்த அந்த தந்தை, குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றாலும் அது தன் குழந்தை அல்ல என்பதை உறுதியா நம்பியிருந்தார். பின்னர் நண்பர்கள் கொடுத்த ஆதரவோடு ஒரு வாரம் கழித்து DNA சோதனை செய்த அவர் அக்குழந்தை தன்னுடையது அல்ல என்பதை நிறுபித்தார்.
தவற்றை உணர்ந்த மருத்துவமனை தரப்பு, உண்மையான குழந்தையை தேடிக் கண்டுபிடித்து அந்த குழந்தைக்கும் DNA சோதனை செய்யப்பட்டு , உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அந்த தந்தை பதிவிட வலைத்தளவாசிகள் மருத்துவமனையை திட்டித் தீர்த்து வருகின்றனர்.