கோலாலம்பூர், செப்டம்பர் -19, சிறார் இல்ல துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் குளோபல் இக்வான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர், நேற்றிரவு கெடா புக்கிட் காயு ஹீத்தாமில் கைதாகினர்.
2 motorhome சொகுசு வாகனங்களின் பதிவு எண் பட்டையில் குளோபல் இக்வான் நிறுவனத்தின் சின்னம் இருந்தது கண்டறியப்பட்டதால், வட மண்டல எல்லைகளுக்கான உளவுப் பிரிவு அந்த 5 பேரையும் கைதுச் செய்தது.
தாய்லாந்துக்குத் தப்பியோடும் முயற்சியில் அவ்விரு வாகனங்களும் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு மற்றும் சுங்கச் சாவடியை நோக்கிப் பயணமானதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tam Sri Razarudin Husain சொன்னார்.
28 முதல் 41 வயதிலான ஐவருக்கும் குற்றப்பதிவுகள் எதுவுமில்லை.
அவர்களிடமிருந்து 2 motorhome வாகனங்களும் ஒரு Myvi-யும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேல் விசாரணைக்காக குபாங் பாசு போலீஸ் தலைமையகம் கொண்டுச் செல்லப்பட்டன.