
தாய்லாந்தில் நுழையும் அந்நிய சுற்றுப் பயணிகளுக்கு, வரும் ஜூன் மாதம் தொடங்கி, 300 பாட் அல்லது 39 ரிங்கிட் 25 சென்னை கட்டணமாக வசூலிக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அந்நாட்டில் விபத்தில் சிக்கும் அந்நிய சுற்றுப் பயணிகளுக்கு உதவுவதோடு, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் அந்த கட்டணம் பயன்படுத்தப்படுமென கூறப்படுகிறது.
எனினும், வேலை அனுமதி அல்லது எல்லை அனுமதியை வைத்திருக்கும் அந்நிய நாட்டவர்களுக்கு அந்த கட்டணம் விதிக்கப்படாது.