Latestஉலகம்

தாய்லாந்து குகையிலிருந்து காப்பாற்றப்பட்ட முன்னாள் காற்பந்து அணி கேப்டன் பிரிட்டனில் உயிரிழந்தார்

2018-ஆம் ஆண்டு, Chiang Rai-யிலுள்ள குகையிலிருந்து, இரு வார போராட்டத்திற்கு முன் காப்பாற்றப்பட்ட 12 சிறுவர்களில் ஒருவரான Duangpetch Promthemp, பிரிட்டனில் உயிரிழந்ததார்.

Dom என அழைக்கப்படும் அந்த 17 வயது இளைஞர் Wild Boars அணியின் தலைவர் ஆவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தங்கும் விடுதி அறையில் சுயநினைவு இன்றி கிடக்க காணப்பட்ட Dom செவ்வாய்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Brooke House காற்பந்து அகாடமியில் இணையும் வாய்ப்பு கிட்டியதால், கடந்தாண்டு இறுதி தொடங்கி பிரிட்டனில் வசித்து வந்தார்.

விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படும் போதும், உண்மையில் அவர் எதனால் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!