பேங்கோக், ஏப்ரல்-10, தாய்லாந்திற்குள் நுழையும் போது அல்லது வெளியேறும் போது குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் TM.6 படிவத்தைச் சமர்ப்பிப்பதில் இருந்து வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 15 வரை அவ்விலக்கு அமுலில் இருக்கும் என தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காகவும், சோதனைச் சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக்காலக்கட்டத்தில், TM.6 படிவத்தை சமர்ப்பிக்கத் தேவையின்றி, தாய்லாந்திற்குள் நுழைய
வெளிநாட்டு சுற்றுப் பயணிகளில் குறிப்பிட்ட பிரிவினர் அனுமதிக்கப்படுவர்.
TM.6 படிவம் என்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படும் ஆவணமாகும்.
ஆறு மாத காலத்திற்குப் பிறகு இந்த விலக்களிப்பு அறிவிப்பின் தாக்கம் மதிப்பீடு செய்யப்படும்.
ஒருவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கண்டறியப்பட்டால், இந்த தளர்வு உடனடியாக ரத்துச் செய்யப்படலாம் என்றும் அப்பேச்சாளர் கோடி காட்டினார்.