
பேங்காக், மே 15 – தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ராணுவ அரசாங்கத்தின் ஆதரைவைப் பெற்ற அரசியல் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ ஆதரவிலான கட்சிகளை தாய்லாந்து வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட 99 விழுக்காடு வாக்குகளில் Liberal முற்போக்கு கட்சி மற்றும் Pheau Thai கட்சி ஆகியவை பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளன. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அவ்விரு கட்சிகளுக்கிடையே இணக்கம் காண்பதற்கான பேச்சுக்கள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து கோடிஸ்வரரான Shinawatra குடும்பத்தினருக்கு சொந்தமான Pheau Thai கட்சியும் இளைய தலைமுறையின் பெரும்பாலான ஆதரவைப் பெறற லிபரல் முற்போக்கு கட்சியும் பெரும்பாலான இடங்களை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.