
பேங்காக். மே 9 – தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் கோடிஸ்வரர்களில் ஒருவருமான Thaksin Shinawatra 17 ஆண்டு காலம் நாடு கடந்து வாழந்த பின்னர் ஜூலை மாதம் தாயகம் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயகம் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளேன். இதற்காக தாம் அனுமதி கோரியிருப்பதாகவும் ஜூலை மாதம் தமது பிறந்தநாள் வருவதற்குள் தாம் தாய்லாந்து திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக 73வயதுடைய தக்சின் கூறினார்.