Latestமலேசியா

தாய்லாந்து, ஹாட் யாய் மற்றும் கிராபிக்கு புதிய விமான சேவைகள் ; அறிமுகம் செய்கிறது பாத்தேக் ஏர்

கோலாலம்பூர், ஜூலை 11 – தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களான ஹாட் யாய்க்கும் (Hat Yai), கிராபிக்கும் (Krabi), கோலாலம்பூரிலிருந்து இரு புதிய விமான சேவைகளை பாத்திக் ஏர் (Batik Air) அறிமுகம் செய்யவுள்ளது.

அந்த புதிய சேவைகள் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல், நாள்தோறும் மேற்கொள்ளப்படும்.

B737 ரக விமானத்தில், இரட்டை வகுப்பு இருக்கைகளுடன் பயணிகள் சிறந்த பயண அனுபவத்தை பெறலாம்.

இந்த விரிவாக்கம், பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் பாத்திக் ஏர் நிறுவனத்திற்கு இருக்கும் முனைப்பையும், தென்கிழக்கு ஆசிரியாவிலுள்ள, மனதை மயக்கும் இடங்களை இணைக்க வேண்டும் எனும் உத்தேகத்தையும் பிரதிபலிப்பதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி தெரிவித்தார்.

அதோடு, ஆண்டுதோறும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்வதால், அவர்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அந்த புதிய சேவைகள் அறிமுகம் கண்டுள்ளன.

அதனால், பரபரமான சந்தைகள், கலாச்சார செழுமை மற்றும் நாவில் நீர் ஊறவைக்கும் அங்காடி உணவு பிரியர்கள், பாத்திக் ஏர் மூலம் இனி ஹாட் யாயிக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

மாறாக, இயற்கை ஆர்வலர்கள் கிராபிக்கு சென்று வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!