பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 – தனது தாயார் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறி, கோத்தா டாமான்சாராவில் பொது மக்களிடமிருந்து சிறுவன் ஒருவன் உதவிக் கோரிய காணொளி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில், அச்சம்பவத்திற்கு தாயிற்கும் மகனுக்குக் இடையிலான தகராறே காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அச்சம்பத்தில் துன்புறுத்தலுக்கான எந்த அம்சமும் இல்லையென பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் (Mohamad Fakhruddin Abdul Hamid)மொஹம்மட் ஃபக்ரூடின் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.
அந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நிகழ்ந்த வேளை , சிறுவனைப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததாக அவர் கூறினார்.
தம்பியுடன் சண்டையிட்டதால் தாய் கோபித்துக் கொண்டதாக Mohamad Fakhruddin Abdul Hamid தெரிவித்தார்.