
கோலாலம்பூர், பிப் 6 – தைப்பூச திருவிழா கொண்டாட்டம் ஒரு நிறைவு எட்டும் வகையில் தாய்க் கோயில்களை நோக்கி செல்லும் ரத ஊர்வலங்களில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டுள்ளனர். பத்துமலை திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட திருமுருகனின் வெள்ளி ரதம் இன்று நள்ளிரவுக்குள் கோலாலம்பூர் ஜாலான் பண்டாரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தாய்க்கோயிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து முருகனின் வேல் தாங்கிச் செல்லும் தங்க ரதம்
லெபோ குயினிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் தாய்க் கோயிலை நோக்கி நோக்கி புறப்பட்டது. . அதே போன்று ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரதம் நாளை காலை 10 மணியளவில் புந்தோங் ஜாலான் சுங்கை பாரியிலுள்ள மாரியம்மன் கோயிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.