Latestவிளையாட்டு

திடலில் திடீரென சரிந்த டென்மார்க் விளையாட்டாளர்  எரிக்சன் நலமுடன் உள்ளார்

கொபன்ஹெகன், ஜூன் 13 – யூரோ  2020 காற்பந்தாட்டத்தின் போது,  திடிரேன திடலில் சரிந்து விழுந்த டென்மார்க் மத்திய திடல் ஆட்டக்காரர்  கிறிஸ்டியன் எரிக்சன் , மருத்துவமனையில் கண் முழித்தார்.

ஆட்டத்தின் 42 –வது நிமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது , திடிரென   எரிக்சன்  மயங்கி விழுந்ததைக் கண்டு, சக விளையாட்டாளர்கள் பதற்றமடைந்தனர்.

சக விளையாட்டாளர்கள்  எரிக்சனை சுற்றி நின்று பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினர்.  எரிக்சனுக்கு திடலிலே அவசர மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  29 வயது எரிக்சனுக்கு சுயநினைவு திரும்பியதாக டென்மார்க் காற்பந்து சங்கம் தெரிவித்தது.

ஒத்தி வைக்கப்பட்ட ஆட்டம் பின்னர் தொடர்ந்த நிலையில், டென்மார்க் , ஃபின்லாந்திடம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வி கண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!