Latestஇந்தியாஉலகம்

திடீரென மணப்பெண் மரணம்; அப்பெண்ணிண் தங்கையை கரம்பிடித்தார் மணமகன்

புதுடில்லி,ஜூன் 3 – திருமணச் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பாக, மணப்பெண் திடீரென மரணமடைந்ததை அடுத்து, துக்கத்தைக் கூட முழுமையாக அனுசரிக்காமல், அப்பெண்ணின் தங்கையை கரம் பிடித்திருக்கிறார் மணமகன்.

அந்த சம்பவம், உத்தர பிரதேசம், எதவா (Etawah) மாவட்டத்திலுள்ள சமஸ்புரா கிராமத்தில் நிகழ்ந்தது.

திருமண மேடையில் ஏறவிருந்த மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்து வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்ட நிலையில், மறு அறையில் திருமணத்திற்காக அவரது தங்கை தயாராகிக் கொண்டிருந்தார்.

துயரமான சூழலிலும் அந்த திருமணத்தை நடத்திவிட வேண்டுமென பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினரும் முடிவெடுத்ததாக, ‘டைம்ஸ் ஓஃப் இந்தியா’ ஊடகம் செய்தி வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!