கோலாலம்பூர், மார்ச் 7 – கூட்டரசு தலைநகரில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனமாக இருக்கும்படி மக்களை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டார்.
மலேசிய குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் தலைநகரில் ஆறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
திடீர் வெள்ளத்திற்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி இஸ்மாயில் சப்ரி தமது டிவிட்டரில் பதிவிட்டார். பாதிக்கப்பட்டஇடங்களில் விரைவான உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.