கோலாலம்பூர், நவம்பர்-12 – நன்கு திட்டமிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானிக்கு 268,620 ரிங்கிட்டை வழங்குமாறு, ஏர் ஏசியா விமான நிறுவனத்தை தொழில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எரிக் கோ (Eric Koh) எனும் அவ்விமானிக்கு ஆதரவாக, தொழில் நீதிமன்றத் தலைவர் எஸ்.வனிதாமணி அத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு அந்த மலிவுக் கட்டண விமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த எரிக், 2022-ல் கோவிட்-19 பெருந்தொற்றின் போது கட்டாய விடுமுறையில் வைக்கப்பட்டார்.
தவிர, எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் செயல்படவில்லை எனக் கூறி, அவரின் மாதச் சம்பளம் அதள பாதாளத்திற்கு 75 விழுக்காடுக் குறைக்கப்பட்டது.
விரக்தியில் தானகவே வேலையை விட்டு போய் விட வேண்டுமென்ற உள்நோக்கத்துடனேயே ஏர் ஏசியா சம்பளத்தைக் குறைத்து, தன்னை கஷ்டப்படுத்தியதாக எரிக் தனது வழக்கில் கூறியிருந்தார்.
ஆனால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே எரிக் வேலையை விட்டு விலகியதாக ஏர் ஆசியா வாதாடியது.
எனினும், எரிக்கின் ஒப்புதல் இல்லாமல் அவரின் சம்பளத்தை 50 விழுக்காட்டுக்கும் மேல் குறைக்க ஏர் ஆசியாவுக்கு அதிகாமில்லை என வனிதாமாணி தனது தீர்ப்பில் கூறினார்.
அதோடு, பெருந்தொற்று காலத்திலும் 2021-ரில் ஏர் ஆசிய இலாபத்தைப் பதிவுச் செய்துள்ளது.
எனவே, வேலை போன காலக் கட்டத்திற்கான சம்பளத் தொகையாக 232,320 ரிங்கிட்டும், 36,300 ரிங்கிட்டை இழப்பீடாகவும் சேர்த்து மொத்தம் 268,00 ரிங்கிட்டை ஏர் ஆசிய வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.