Latestமலேசியா

தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை இனி தனியாக மாலையில் வெளியிடப்படாது

புத்ராஜெயா, பிப் 17 – கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இனி தனியாக மாலை நேரத்தில் வெளியிடப்படாது.

இதர கோவிட் புள்ளி விபரங்களுடன் சேர்த்து , அந்த எண்ணிக்கை மறுநாள் காலையில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கையை மட்டும் தனியாக வெளியிட்டு மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் , இன்று மாலை மணி 5-க்கு நேரலையாக ஒளியேறிய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!