
பெய்ஜிங், டிச 26 – சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் , இனி அந்நாட்டின் தினசரி கோவிட் பாதிப்புக்கான புள்ளி விபரங்களை வெளியிடாது. தினசரி புள்ளி விபரத்தை வெளியிடுவதை நிறுத்துக் கொண்டதற்கான காரணத்தை வெளியிடாத சீனா, இனி எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அந்த புள்ளி விபரம் வெளியிடப்படும் என்ற தகவலையும் தெரிவிக்கவில்லை.
கோவிட் கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, சீனாவில் அந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு திடீரென உயர்வு கண்டது.
இவ்வேளையில், நாடு முழுவதும் PCR – கோவிட் சோதனை முகப்புகளை சீனா மூடிய நிலையில், சொந்தமாகவே வீட்டிலேயே கோவிட் பரிசோதனை செய்துக் கொள்ளும் சீனர்கள் , தொற்று கண்டிந்ருதால் அதை கட்டாயம் அறிவிக்கத் தேவையும் இலை.
இந்நிலையில், அந்நாட்டில் தினசரி புதிய கோவிட் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தாலும், அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு சில ஆயிரம் புதிய கோவிட் தொற்று எண்ணிக்கை விபரங்களை மட்டுமே வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.