கோலாலம்பூர், பிப் 5 – ஜாலான் கிள்ளான் லாமாவில் செயல்பட்டு வந்த இணைய சூதாட்ட கும்பலை போலீசார் முறியடித்தனர். அந்த சூதாட்ட மையம் தினசரி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து 10,000 ஆயிரம் ரிங்கிட்வரை வருமானமாக பெற்று வருவது தெரியவருவதாக குற்றப்புலனாய்வுத்துறையின் தலவர் Habibi Majinji தெரிவித்தார்.
அடுக்ககத்தின் 40 ஆவது மாடியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் அந்த சூதாட்ட மையம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 5 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டதோடு பல்வேறு கணினிகள் மற்றும் கை தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வங்காளதேசத்தில் உள்ளவர்களை வாடிக்கையாளர்களாக இலக்காக் கொண்டு அந்த சூதாட்ட மையம் செயல்பட்டு வந்ததாக Habibi Majinji கூறினார்.