
பாடாங் பெசார், மே 17 – பெர்லீஸ், பாடாங் பெசாரில், 30 ஆண்டுகளுக்கு முன் திமா தாசோ அணைக்கட்டு கட்டப்பட்ட போது, மூழ்கிப் போன பழைய சாலை ஒன்று மீண்டும் ‘தோன்றிய’ சம்பவம் சுற்று வட்டார மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
கடும் வெப்பத்தை தொடர்ந்து, திமா தாசோ அணைக்கட்டில் நீர் வற்றி வருவதால், அந்த பாதை மீண்டும் கண்களுக்கு தென்பட்டுள்ளது.
குறிப்பாக, திமா தாசோ ஏரியின் நடுப்பகுதியில் தோன்றி இருக்கும் அப்பாலம், மீன் பிடிக்க செல்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.
இன்னும் சீராக இருக்கும் அந்த பழைய பாலத்தை நேரடியாக காணவும், அதில் நடந்து பார்க்கவும், புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளவும் பலர் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
இதே போல, 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டும் வாக்கில், நாட்டில் வெப்ப காலம் நிலவிய போதும், இப்பாலத்தை காணும் அரிய வாய்ப்பு கிடைத்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.