Latestஇந்தியா

திமுகவின் வெற்றிக்காக நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்திய பெண்

சென்னை, மே 4-  தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுக வெற்றி பெற்றதற்காக  பெண் தொண்டர் ஒருவர்  தனது நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்து  நேர்த்திக் கடன் செலுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதுடைய வனிதா என்ற அந்த பெண்ம திமுகவின் தீவிர தொண்டராவார்.  தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால்  தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வனிதா வேண்டிக்கொண்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றதோடு திமுகவின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கவிருப்தால் வனிதா  நேற்று காலை  கோயிலுக்கு வந்து நாக்கை அறுத்து கோயில் படியில் வைத்துள்ளார்.

ரத்தம் வெளியேறியதால்  அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து கோயிலுக்கு வந்த போலீசார் துன்டான நாக்கையும் எடுத்துக்கொண்டு  வனிதாவை   பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!