ஜகர்த்தா, பிப் 14 – கடற்கரையில் அதிகாலையில் தியானம் மேற்கொள்ளும் சடங்கில் கலந்துகொண்டவர்களில் 10 பேர் அலையினால் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்தனர். கிழக்கு ஜாவாவின் Payangan கடற்கரையில் 23 பேர் கைகளை கோர்த்துக்கொண்டு தியானம் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அலைகள் மிகவும் வேகமாக இருந்ததால் கடலில் மூழ்கியர்களை காப்பாற்துவதில் சிரமம் ஏற்பட்டது. 10 பேரின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. ஒருவர் காணவில்லை. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த தியானக் குழுவின் தலைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Articles
Check Also
Close